சென்னையில் விறு விறுப்பாக நடைபெறும் மனுதாக்கல்

March 26, 2024

சென்னையில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 20ம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாளிலிருந்து அரசியல் கட்சிகள், சுயேட்சை கட்சிகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். பிற்பகல் மூன்று மணி வரை மட்டுமே மனு தாக்கல் அனுமதிக்கப்பட்டு வருவதால் டோக்கன் முறையில் வரிசையாக அழைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னை பகுதியில் அதிகபட்சமாக […]

சென்னையில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 20ம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாளிலிருந்து அரசியல் கட்சிகள், சுயேட்சை கட்சிகள் உற்சாகமாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். பிற்பகல் மூன்று மணி வரை மட்டுமே மனு தாக்கல் அனுமதிக்கப்பட்டு வருவதால் டோக்கன் முறையில் வரிசையாக அழைக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 52 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் வடசென்னை பகுதியில் அதிகபட்சமாக 23 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மத்திய சென்னையில் 10 பேரும், தென் சென்னையில் 19 பெரும் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் 21 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 16 பேரும், சுயேச்சைகள் 15 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் நாளையுடன் மனு தாக்கல் முடிவடைவதால் வேட்புமனு தாக்கல் இன்று மாலைக்குள் 70 தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu