பங்குச் சந்தை தரகு வர்த்தகத்தில் கால் பதிக்கும் போன் பே - புதிய செயலி அறிமுகம்

August 30, 2023

வால்மார்ட்டுக்கு சொந்தமான போன் பே நிறுவனம், பங்குச் சந்தை தரகு வர்த்தகத்தில் புதிதாக கால் பதித்துள்ளது. இதற்காக, பிரத்யேகமாக, stock(dot)market என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது, போன் பே நிறுவனத்தின் கிளையான போன் பே வெல்த் பிரோக்கிங் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. stock(dot)market தளத்தில், மியூச்சுவல் ஃபண்ட், இன்ட்ரா டே டிரேடிங், வெல்த் பேஸ்கட் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மிகக் குறைந்த விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது பங்கு வர்த்தகம் ஒன்றுக்கு 20 ரூபாய் […]

வால்மார்ட்டுக்கு சொந்தமான போன் பே நிறுவனம், பங்குச் சந்தை தரகு வர்த்தகத்தில் புதிதாக கால் பதித்துள்ளது. இதற்காக, பிரத்யேகமாக, stock(dot)market என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது, போன் பே நிறுவனத்தின் கிளையான போன் பே வெல்த் பிரோக்கிங் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

stock(dot)market தளத்தில், மியூச்சுவல் ஃபண்ட், இன்ட்ரா டே டிரேடிங், வெல்த் பேஸ்கட் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மிகக் குறைந்த விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொது பங்கு வர்த்தகம் ஒன்றுக்கு 20 ரூபாய் அல்லது 0.05% கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், இந்த தளத்தை பயன்படுத்துவதற்கு ஒரு முறை கட்டணமாக 199 வசூலிக்கப்படுகிறது. இது 2024 மார்ச் 31ஆம் தேதி வரை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, 400 ரூபாய் வரையிலான பங்கு பரிவர்த்தனைகளுக்கு தரகு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu