போன் பே நிறுவனத்தின் யுபிஐ லைட் பயன்பாட்டுக்கு வெளியானது

போன் பே செயலியில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ லைட் அம்சம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிவந்துள்ளது. 200 ரூபாய்க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு, யுபிஐ லைட் கணக்கு மூலம் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பின் நம்பரை உள்ளிட்டு, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், போன் பே யுபிஐ லைட் கணக்கில் உள்ள இருப்புகளின் மூலமாகவே இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளரின் வங்கிகள் தொடர்பு கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் […]

போன் பே செயலியில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ லைட் அம்சம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளிவந்துள்ளது. 200 ரூபாய்க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு, யுபிஐ லைட் கணக்கு மூலம் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பின் நம்பரை உள்ளிட்டு, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், போன் பே யுபிஐ லைட் கணக்கில் உள்ள இருப்புகளின் மூலமாகவே இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளரின் வங்கிகள் தொடர்பு கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் யுபிஐ லைட் கணக்கில் 2000 ரூபாய் வரையில் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போன் பே செயலியில் யுபிஐ லைட் அம்சத்தை அணுகுவது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மளிகை பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ லைட் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் அனைத்து வித பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது இதன் மூலம் எளிதாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், யுபிஐ லைட் மூலம் விரைவான மற்றும் தடையில்லா பணப்பரிவர்த்தனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக போன் பே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu