இந்திய விமானப்படையின் ஏ.என். 12 ரக விமானம் 56 ஆண்டுகளுக்கு முன் 102 வீரர்களுடன் விபத்தில் சிக்கியது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 12 ரக இரட்டை எஞ்சின் விமானம், 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி காஷ்மீரில் விபத்துக்குள்ளானது. விமானம் இறங்கும்போது 102 பேர் பலியாகினர். இப்போது, 2003-ல் மலையேறும் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிதறிய பகுதிகளில், 2019-ல் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அண்மையில், இந்திய ராணுவத்தின் குழுவினர் மேலும் 4 வீரர்களின் உடல்களை மீட்டுள்ளனர். அவர்கள் மல்கான் சிங், நாராயண் சிங் மற்றும் தாமஸ் சரண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது மீதமுள்ள ஒருவரின் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.