பிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது - தமிழக அரசு

பிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த சாத்தியமில்லாததால், மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான […]

பிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த சாத்தியமில்லாததால், மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால், உள்ளூர் தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள் வரும் ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu