ரஷ்யாவில் பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி

September 25, 2023

ரஷ்யாவில் பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. உக்ரைன் போரில் வெற்றி பெற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்ய பள்ளிகளில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதாக தகவல் வந்துள்ளது. கையெறி வெடிகுண்டு வீசுவது, பதுங்கு குழி தோண்டுவது, துப்பாக்கியை கையாள்வது போன்ற பல போர் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. […]

ரஷ்யாவில் பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.
உக்ரைன் போரில் வெற்றி பெற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்ய பள்ளிகளில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதாக தகவல் வந்துள்ளது. கையெறி வெடிகுண்டு வீசுவது, பதுங்கு குழி தோண்டுவது, துப்பாக்கியை கையாள்வது போன்ற பல போர் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய பாடத்திட்டத்தில் நாட்டிற்காக தியாகம் செய்வதை வலியுறுத்தும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களை ரஷ்யா அமைத்துள்ளது.மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட வற்புறுத்தப்படுகிறார்கள். தானியங்கி துப்பாக்கிகளை கையாள நிபுணர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ரஷ்யா அரசின் இந்த செயலுக்கு அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu