மத்திய அரசின் பிஎல்ஐ திட்டம் - 3000 கோடி செலவு; 53500 கோடி முதலீடு; 3 லட்சம் வேலை வாய்ப்புகள்

April 27, 2023

கடந்த 2020 மார்ச் மாதத்தில், மத்திய அரசின் பி எல் ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது தொடங்கி இதுவரையில், இந்த திட்டத்தின் முக்கியத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பி எல் ஐ திட்டத்தின் கீழ், இதுவரை 53500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் செலவு செய்த தொகை 3000 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், அரசாங்கத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் 5 […]

கடந்த 2020 மார்ச் மாதத்தில், மத்திய அரசின் பி எல் ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது தொடங்கி இதுவரையில், இந்த திட்டத்தின் முக்கியத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பி எல் ஐ திட்டத்தின் கீழ், இதுவரை 53500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசாங்கம் செலவு செய்த தொகை 3000 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், அரசாங்கத்திற்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் 5 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான கூடுதல் பொறுப்பு செயலாளர் ராஜீவ் சிங் தாக்கூர், "உற்பத்தி துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசாங்கத்தின் நிதி உதவி இருந்தாலும், நிறுவனங்களே தங்கள் செயல்பாடுகளை முதன்மையாகத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்தில், மின்னணு தொழில் துறை முதன்மையாக வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த நிலையில், மருந்து மற்றும் உணவு உற்பத்தி ஆகிய துறைகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த 717 நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கி உள்ளது" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu