நாட்டின் மிக நீளமான 22 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரம்மாண்ட பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
மும்பை மற்றும் அருகில் உள்ள நவி மும்பை நகரங்களை இணைக்கும் பிரம்மாண்ட பாலத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முடிவடைந்தது. இது ரூபாய் 17843 கோடி செலவில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் சைக்கிள், மூன்று சக்கர வாகனங்கள்,டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பிரம்மாண்ட பாலம் ஆனது மும்பை சிவ்ரியில் தொடங்கி நவி மும்பை புறநகர் ஆன சிர்லேவில் முடிவடைகிறது. இருப்பினும் கடல்வழி பாலத்திற்கு அடல் சேது என முன்னாள் பிரதமர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார்.