இந்தியாவின் முதல் நமோ பாரத் ரயில் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

September 16, 2024

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயிலான 'நமோ பாரத் விரைவு ரயிலை' புஜ் மற்றும் அகமதாபாத் இடையே இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய ரயில், 360 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 5 மணிநேரம் 45 நிமிடங்களில் கடக்கிறது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், வழியில் ஒன்பது நிலையங்களில் நிற்கிறது. குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், 1150 பேர் அமர்ந்து பயணிக்கலாம். மேலும் […]

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயிலான 'நமோ பாரத் விரைவு ரயிலை' புஜ் மற்றும் அகமதாபாத் இடையே இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய ரயில், 360 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 5 மணிநேரம் 45 நிமிடங்களில் கடக்கிறது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், வழியில் ஒன்பது நிலையங்களில் நிற்கிறது.

குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், 1150 பேர் அமர்ந்து பயணிக்கலாம். மேலும் 2058 பேர் நிற்க இட வசதி உள்ளது. முழு பயணத்திற்கான கட்டணம் ரூ.455 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய இந்த குளிரூட்டப்பட்ட ரயில், இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பில் புதிய அத்தியாயத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu