அமெரிக்காவில் பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தினார்.
பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, குவாட் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் கடைசி நாளான நேற்று, பிரதமர் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்பில், உக்ரைன் - ரஷியா போரை முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கத் தயாராக இருப்பதாக மோடி உறுதியளித்தார். தற்போது பிரதமர் மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.