பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. அடுத்ததாக பிரச்சார திட்டங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் வேட்புமனு தாக்கலானது வரும் 27ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 30-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பிரச்சாரம் தீவிரமாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை தமிழகம் வந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு மூன்று முறை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதில் இதுவரை இடம்பெறாத வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கான திட்டம் தயாராகி வருகிறது.