பிரதமர் மோடி அடுத்த மாதம் உக்ரைன் பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இம்மாத தொடக்கத்தில் ரஷ்யா சென்று அங்கு அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் உக்ரைன் அதிபர் வினாடிமிர் ஜெலேன்ஷ்கியை சந்தித்து பேச உள்ளார். மேலும் இரு தலைவர்களும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்ல உள்ளார்.