இஸ்லாமாபாத்தில் பிராந்திய மாநாடு - மோடிக்கு அழைப்பு

August 30, 2024

இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் கூறுகையில், உறுப்பு நாடு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்திய […]

இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பாலோக் கூறுகையில், உறுப்பு நாடு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இந்திய பிரதமருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை சில நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu