இலங்கை - சீனா இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

March 28, 2024

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு தலைநகர் பெய்ஜிங்கில் அதிபர் ஜிங் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் ஒன்பது புதிய […]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு தலைநகர் பெய்ஜிங்கில் அதிபர் ஜிங் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிரந்தர நட்பு நீடித்திருக்க வேண்டும் என்று சீன அதிபர் கூறப்பட்டுள்ளது. ரப்பருக்கு பதிலாக அரிசி வழங்கும் இரு தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர ஆதரவு, பரஸ்பர நம்பிக்கை, தன்னிறைவு போன்றவை மேம்படும் என்றும் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். பொருளாதார சரிவிலிருந்து இலங்கையை மீட்கும் வகையில் கடன் கட்டமைப்புகளை மாற்றி அமைக்க சீனா ஆதரவளிப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் கடன் அளித்த நாடு சீனா. கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை திவால் நிலையை அறிவித்த போது அந்த நாட்டுக்கு சீனா நாலாயிரம் கோடி டாலர் கடன் அளித்திருந்தது.
சைனா வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டால்தான் இலங்கைக்கு நிதியுதவி சாத்தியம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தது. இந்த சூழலில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu