நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்

January 6, 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்தாண்டு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூபாய் 1000 […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்தாண்டு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் கோட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் டோக்கன் விநியோகம் முடிவடைந்து விடும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu