திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் தனது பதவியை இழந்ததுடன் எம்எல்ஏ பதவியையும் இழந்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பொண்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் ஆரன் ரவி பொன்முடியை அமைச்சராக்குவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவர்னர் ஆர்.என். ரவிக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிப்பதாகவும் இல்லை என்றால் நாளை தீர்ப்பளிக்கிறோம் என்றும் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து பதவி ஏற்க வருமாறு கவர்னர் ரவி பொன்முடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனோடு இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.