சாம் அல்ட்மேனின் கிரிப்டோ கரன்சிக்கு போர்ச்சுகல் தடை

March 27, 2024

ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரியான சாம் அல்ட்மேன், வேர்ல்ட் காயின் என்ற கிரிப்டோகரன்சியை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தகவல் பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளுக்காக வேர்ல்ட் காயின் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவதாக போர்ச்சுகல் நாடு அறிவித்துள்ளது. வேர்ல்ட் காயின் கிரிப்டோ கரன்சியை பெறுவதற்கு கருவிழி ஸ்கேன் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அடையாள எண் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, கிரிப்டோ கரன்சி சந்தையில் அரங்கேற்றப்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படுவதாக வேர்ல்ட் காயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், […]

ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரியான சாம் அல்ட்மேன், வேர்ல்ட் காயின் என்ற கிரிப்டோகரன்சியை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தகவல் பாதுகாப்பு சார்ந்த குறைபாடுகளுக்காக வேர்ல்ட் காயின் கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துவதாக போர்ச்சுகல் நாடு அறிவித்துள்ளது.

வேர்ல்ட் காயின் கிரிப்டோ கரன்சியை பெறுவதற்கு கருவிழி ஸ்கேன் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அடையாள எண் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, கிரிப்டோ கரன்சி சந்தையில் அரங்கேற்றப்படும் முறைகேடுகள் தவிர்க்கப்படுவதாக வேர்ல்ட் காயின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போர்ச்சுக்கல் நாட்டை பொறுத்தவரை, சிறிய வயது உடையவர்களின் தகவல்களை (கருவிழி) பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமை படி, வேர்ல்ட் காயின் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்துக்கு இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பிறகு, இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu