சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தபால் ஓட்டு பணி தொடக்கம்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தபால் ஓட்டு மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்கும் விருப்பத்திற்கு வசதியாக வீடுகளுக்கு சென்று 12 படிவம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். 4176 பேர் தபால் ஓட்டிற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் 336 […]

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தபால் ஓட்டு மூலம் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்கும் விருப்பத்திற்கு வசதியாக வீடுகளுக்கு சென்று 12 படிவம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். 4176 பேர் தபால் ஓட்டிற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் 336 பேர் மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேற்படி நபர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறுவதற்கு 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று முதல் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. தபால் வாக்குப்பதிவு இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு தபால் வாக்கு பதிவு தொடங்குகிறது வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் வாக்குச்சீட்டு உள்ள பெட்டியை 3 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். இவை அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu