தமிழகத்தில் 219 நாடுகளுக்கு பொருள்களை அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதி மையம் தொடங்கப்பட உள்ளது.
அஞ்சல் துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கப்பட இருப்பது குறித்து காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஞ்சல் துறை தலைவர் ஜி. நடராஜன் தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல் துறை ஏற்றுமதி மையங்கள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு 219 நாடுகளுக்கு தங்களது பொருட்களை அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.இதில் அஞ்சல் துறை சிறப்பு விருந்தினராக அஞ்சல் துறை தலைவர் பி.பி ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.