ஆந்திர சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.
நடந்த முடிந்த சட்டசபை ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதில் ஆந்திராவில் முதலமைச்சராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு வருகிற ஒன்பதாம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் ஒன்பதுக்கு பதிலாக ஜூன் 12-ம் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஜூன் எட்டாம் தேதி பதவி ஏற்க உள்ளதால் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது