சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர் யூஜிசியுடன் இணைந்து ஐந்து பாடங்களுக்கான நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தற்போது முறைகேடு புகார் காரணமாக முன்னதாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே […]

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூன் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர் யூஜிசியுடன் இணைந்து ஐந்து பாடங்களுக்கான நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தற்போது முறைகேடு புகார் காரணமாக முன்னதாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் ஜூன் 25 முதல் 27ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu