டிஜிட்டல் சேவைகள் குழுவில், குறிப்பாக, ஆப்பிள் புக்ஸ் பயன்பாடு மற்றும் புத்தகக் கடை குழுக்களில் சுமார் 100 பேரை பணி நீக்கம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்கங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை உயர்நிலை விஷன் ஹெட்செட்டின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருந்த ஸ்மார்ட்வாட்ச் காட்சி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆப்பிள் விற்பனை 6.5% குறைந்துள்ளது. செப்டம்பர் 2023 நிலவரப்படி சுமார் 161,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டிருந்த நிறுவனம், புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறது. இந்த பணி நீக்கமும் இவற்றின் பகுதியாக கருதப்படுகிறது.