அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க பைடன் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மோசமான அளவிற்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பாதித்துள்ளன. இந்த ஆண்டு 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. சமீபத்தில், அதிபர் ஜோ பைடன் பேசும்போது, "துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்க முடியாது. கடுமையான சட்டங்கள் தேவை" என்றார். 2023-ல், துப்பாக்கி சட்டங்களை கவனிக்கும் பொறுப்பு துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பைடன் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மேலும், "துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகள், மற்ற காரணங்களில் உயிரிழக்கும் குழந்தைகளைக் காட்டிலும் அதிகம்" என்றார்.