இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பிஜி நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிஜி உட்பட 3 நாடுகளுக்கு அவர் நேற்று சுற்றுப்பயணம் தொடங்கினார். அதன்படி இன்று அவர் அந்த நாட்டை சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மற்றும் பிரதமர் ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பிஜி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்தியா வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார். இந்த பயணத்திற்கு பின் நியூசிலாந்து மற்றும் டிமோருக்கு செல்கிறார். வருகிற ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை அவர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு கவர்னர் சிண்டி கிரோ அழைப்பின் பேரில் அவர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் சந்திப்பு நடத்துகிறார்.