அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க டிரம்புக்கு தடையில்லை - நீதிமன்றம் தீர்ப்பு

March 5, 2024

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கொலராடா நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தேர்தல் வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதற்கு டிசம்பர் 19 அன்று தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கேள்விக்குறியானது. கொலராடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொலராடா நீதிமன்ற உத்தரவை ரத்து […]

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கொலராடா நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தேர்தல் வாக்குச்சீட்டில் டொனால்ட் டிரம்ப் பெயர் இடம்பெறுவதற்கு டிசம்பர் 19 அன்று தடை விதிக்கப்பட்டது. இதனால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கேள்விக்குறியானது. கொலராடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொலராடா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளனர். அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கு தடை விதிக்கும் அரசியல் சட்ட பிரிவை மாநிலங்கள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்து, தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, டொனால்ட் டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கொலராடா நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருந்தது. இது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவருக்கான வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu