இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பூடான் புறப்பட்டு சென்றுள்ளார்.
பிரதமர் மோடி 21ஆம் தேதி பூடானுக்கு அரசு பயணம் மேற்கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூடான் பயணம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. தற்போது இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை பூடான் புறப்பட்டார். மோடியின் வருகை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. மேலும் இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷெரிங் டோப்கே உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.