பிரதமர் மோடி, அமெரிக்காவில் உலகளாவிய விவகாரங்களில் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் 3 நாள் அரசுமுறை பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், உலகளாவிய சவால்களை விவாதித்தார். மேலும் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். அதை தவிர்த்து ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களுடன் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விவகாரங்களில் கலந்துரையாடினார். பின்னர் அமெரிக்கா பயணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளார்.