மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதில் இம்முறை தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த கால தேர்தலில் இருந்த வரவேற்பைவிட இந்த ஆண்டு மிகுந்த எழுச்சியும் வரவேற்பில் உற்சாகமும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் […]

பாஜக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 22 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதில் இம்முறை தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த கால தேர்தலில் இருந்த வரவேற்பைவிட இந்த ஆண்டு மிகுந்த எழுச்சியும் வரவேற்பில் உற்சாகமும் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் வருகிற 13ம் தேதி குஜராத்தில் முடிவடையும் நிலையில் அடுத்த சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. அதில் இந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வர உள்ளார். அப்போது தமிழகத்தில் உள்ள வேலூர்,கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் அமையும் என்றும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பாஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu