நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா மைதான் - எஸ்பிளனேட் ரயில் வழித்தடத்தில், நீருக்கடியில் போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றைக் கடப்பதற்காக 520 மீட்டர் நீளத்துக்கு நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4965 கோடி ரூபாய் செலவில் இந்த மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீருக்கடியில் பயணிக்கும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்த பிரதமர், பள்ளி […]

இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா மைதான் - எஸ்பிளனேட் ரயில் வழித்தடத்தில், நீருக்கடியில் போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றைக் கடப்பதற்காக 520 மீட்டர் நீளத்துக்கு நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4965 கோடி ரூபாய் செலவில் இந்த மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீருக்கடியில் பயணிக்கும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் இணைந்து மெட்ரோ ரயில் பயணம் மேற்கொண்டார். அத்துடன், மேற்கு வங்க மாநிலத்தில் 15000 கோடி மதிப்பிலான வேறு பல திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu