பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதம் ஏற்பு

பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்தார். பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சி 296 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் 17வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் […]

பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சி 296 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் 17வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வருகிற எட்டாம் தேதி பதவி ஏற்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி காபந்து பிரதமராக தொடரும் படி கேட்டுக் கொண்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu