கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் சண்டையிட்டுவந்த 'அர்பாத்' ஆயுதக் குழு தலைவன் ஆர்மென் சாக்ஸ்யான், மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது படை உக்ரைன் படைகளை எதிர்த்து போராடி வந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இதற்கு உக்ரைன் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. உக்ரைன் ராணுவ உளவுத்துறையான எஸ்பியு, சாக்ஸ்யான் சிறைக் கைதிகளை கட்டாயமாக தன் படையில் சேர்த்துள்ளதாக முன்பு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் ரஷியாவில் ராணுவத் தொடர்புடைய பல முக்கிய […]

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவுடன் சண்டையிட்டுவந்த 'அர்பாத்' ஆயுதக் குழு தலைவன் ஆர்மென் சாக்ஸ்யான், மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது படை உக்ரைன் படைகளை எதிர்த்து போராடி வந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இதற்கு உக்ரைன் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

உக்ரைன் ராணுவ உளவுத்துறையான எஸ்பியு, சாக்ஸ்யான் சிறைக் கைதிகளை கட்டாயமாக தன் படையில் சேர்த்துள்ளதாக முன்பு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் ரஷியாவில் ராணுவத் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதும் நினைவு கூறத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu