ஒப்பந்த அடிப்படையில் புதிய உதவியாளர்களை நியமிக்க தடை

January 6, 2024

ரயில்வே நிர்வாக மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி தட்சிண ரயில்வே ஊழியர் சங்க சார்பில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.அதனை அடுத்து 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு புதிய தொழிலாளர்களின் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் […]

ரயில்வே நிர்வாக மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி தட்சிண ரயில்வே ஊழியர் சங்க சார்பில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.அதனை அடுத்து 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு புதிய தொழிலாளர்களின் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து இதை நிலையில் இருக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20ஆம் தேதி உத்தரவிட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமிக்கப்பட்டதாகவும் அவர்களை பணி நீக்க வேண்டும் எனவும் தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் புதிதாக ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால் இந்த வழக்கு பயனின்றி ஆகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கு தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாணையம் நிராகரித்ததால் புதிய ஒப்பந்த ஊழியர்களை 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் வாதாடப்பட்டது. அதனை அடுத்து புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu