தமிழக அரசு தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் பொருட்காட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், திறந்த வெளியிடங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள கட்டிடங்கள், சமூக கூடங்கள் போன்றவற்றில் பொருட்காட்சி நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மேலும் இதற்கான மனுவினை 30 நாட்களுக்கு முன்பு அரசிற்கு கிடைக்க செய்ய வேண்டும். பொருள்காட்சிகளில் ஆபாச நடனங்கள், விளையாட்டுகள், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், பறவை,விலங்கினங்களை வைக்க அனுமதி கிடையாது. விதிகளை மீறும் பட்சத்தில் அளிக்கப்பட்ட அனுமதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்வதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு பொருட்காட்சி நடைபெறும் நேரத்தில் தனியார் பொருட்காட்சி நடத்த அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.