ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி எமிஸ் இணையதளத்தில் கடந்த மே 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு சில காரணங்களுக்காக அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதிய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. […]

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. அதன்படி எமிஸ் இணையதளத்தில் கடந்த மே 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு சில காரணங்களுக்காக அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதிய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களின் மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகி பின் அதன் பின் திருத்தம், முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு 6ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 8 ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu