இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கான காலணிகளை வழங்கும் அதிகாரப்பூர்வ நிறுவனமாக பூமா இணைந்துள்ளது. இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் உடன் பூமா இணைந்துள்ளது குறித்து பூமா நிறுவனம் சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வீரர்களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக விளம்பர பிரச்சாரத்திலும் பூமா நிறுவனம் ஈடுபடுகிறது.
நிகழாண்டில் பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களின் கால் அளவுக்கு ஏற்றவாறு காலணிகளை வடிவமைத்து தரும் பொறுப்பை பூமா நிறுவனம் ஏற்றுள்ளது. மேலும், வீரர்களுக்கு தேவைப்படும் பயணத்திற்கான சுமை பைகள், யோகா மேட்டுகள், ஹெட் பேண்ட், சாக்ஸ், ரெஸ்ட் பேண்ட், துண்டுகள் போன்ற பல்வேறு பொருட்களையும் பூமா தர உள்ளது.