புனே சர்வதேச விமான நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் என மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 17-வது நூற்றாண்டில் வாழ்ந்த துக்காராம், பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் மூலம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றவர். பாஜக கூட்டணி அரசு, மகாராஷ்டிராவின் சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்த இந்த பெயர் மாற்றத்தை முக்கியமாகக் கருதுகிறது. இந்த மாற்றம், வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு முக்கிய நகர்வாக இருக்கிறது.