காலாண்டு மற்றும் வருடாந்திர விற்பனையில் புதிய உச்சம் - புரவங்கரா

April 12, 2023

ரியல் எஸ்டேட் துறையில் பிரபல நிறுவனமாக உள்ள புரவங்கரா, வருடாந்திர மற்றும் காலாண்டு விற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 1007 கோடி ரூபாய் மதிப்பில், வீடுகள் விற்பனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், மொத்தமாக, 3107 கோடி மதிப்பில் விற்பனையை பதிவு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் புரவங்கரா, “வரும் வாரங்களில், 14 […]

ரியல் எஸ்டேட் துறையில் பிரபல நிறுவனமாக உள்ள புரவங்கரா, வருடாந்திர மற்றும் காலாண்டு விற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 1007 கோடி ரூபாய் மதிப்பில், வீடுகள் விற்பனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், மொத்தமாக, 3107 கோடி மதிப்பில் விற்பனையை பதிவு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் புரவங்கரா, “வரும் வாரங்களில், 14 மில்லியன் சதுர அடி இடங்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பணம் கடந்த நிதி ஆண்டில் 2258 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 57% உயர்வாகும்” என்று கூறியுள்ளார். அதே வேளையில், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, புரவங்கரா குழுமத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை 2135 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu