அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே சிறிய அளவிலான வித்தியாசங்களே உள்ளன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கமலா ஹாரிசுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது உலக அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய அதிபர் ஜோ பிடனுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிக்க இருந்தது. அவர் போட்டியிலிருந்து விலகி, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை ஆதரிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், “கமலா ஹாரிசின் தனித்துவமான புன்னகை அனைத்து செயல்களும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது போன்ற உணர்வை தருகிறது” என்று பாராட்டி பேசினார். மேலும், ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் கமலா ஹாரிஸ் ஈடுபட மாட்டார் என்று நம்புவதாக கூறினார். இறுதியாக, அமெரிக்க அதிபரை அந்நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.