ரஷியா அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் செய்ய பரிசீலிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.
அணு ஆயுதமற்ற நாடாக இருந்தாலும், அணு ஆயுதம் உள்ள நாட்டின் ஆதரவுடன் ரஷியாவின் மீது தாக்குதல் மேற்கொண்டால், அந்த தாக்குதலை இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டதாகக் கருதப்படும். அதற்கான தகுந்த பதிலடி வழங்கப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதற்கான அணு ஆயுதப் பயன்பாட்டுக்கான கொள்கையில் மாற்றங்களை பரிசீலிக்கிறார். உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நேட்டோ நாடுகள், அந்த ஆயுதங்களை பயன்படுத்தி ரஷியாவின் மீது தாக்குதல் நடத்த அனுமதித்தால், அந்த நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றார் அவர்.