மாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பற்றி அதிபர் புதின் விளக்கம்

March 26, 2024

கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் 4 பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விளக்கம் அளித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐ எஸ் கே பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையும் இந்த தகவலை உறுதி செய்தது. அதே சமயத்தில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இஸ்லாமிய […]

கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் 4 பயங்கரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐ எஸ் கே பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையும் இந்த தகவலை உறுதி செய்தது. அதே சமயத்தில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என ஒத்துக்கொண்ட அதிபர் புதின், அவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை என கூறுகிறார். மேலும், “தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் உக்ரைனுக்கு தப்பி செல்ல முயன்றது ஏன் என்பது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களை ரஷ்யா மீது ஏவி விட்டது யார் என கண்டறிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu