தமிழகத்தில் காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்

September 19, 2023

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்கிய […]

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு நடைபெற்ற வருகிறது. இந்த காலாண்டு விடுமுறை 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த கல்வி மாவட்டங்கள் மற்றும் அலுவலகங்களில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் முறையில் மதிப்பீடு செய்வதில் வேறுபாடு இருந்து வருகின்றன. இதனால் ஒரே மாதிரியான வினாத்தாள் முறை பின்பற்ற பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் மட்டும் விநியோகிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த வினாத்தாள் முறைகளில் பல்வேறு குளறுபடிகள், பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதுபோன்ற தவறுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க வினாத்தாள்களை கவனமாக கையாள வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu