கர்நாடகா - கிரகலட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்

August 30, 2023

கர்நாடக மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார். கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக கிரகலட்சுமி திட்டம் சொல்லப்பட்டது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முன்னிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. […]

கர்நாடக மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக கிரகலட்சுமி திட்டம் சொல்லப்பட்டது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முன்னிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, 2024 ஆம் நிதி ஆண்டில் 18000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, காங்கிரஸ் கட்சி வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu