ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் இந்திய கூட்டணி கட்சியை எதிர்த்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றார். பின்னர் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார். அதேபோலவே வருகின்ற பாராளுமன்ற தொகுதியிலும் ராகுல் காந்தி இதில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஆளும் பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில் ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் விரும்புகிறது. இதனால் வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என கேட்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் அமேதி தொகுதியில் பாஜகவை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டுமென விரும்புவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இது குறித்த முடிவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள பிரிவு காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கூறுகையில் கட்சியின் மத்திய தேர்தல் குழு தான் இதற்கான முடிவுகளை எடுக்கும். வயல்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.