மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்

மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது. சென்னை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது. சென்னை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியதாவது:- சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை முழுவதும் மிக அதிக அளவில் மழை கொட்டியது. அதிகபட்சமாக பெருங்குடியில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 அல்லது 4 நாட்கள் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu