பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக […]

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றவேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும். அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu