கொச்சியில் கடற்படை வீரர்களுடன் கப்பலில் ராஜ்நாத்சிங் யோகா செய்தார்

கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் கடற்படை வீரர்களுடன் சேர்ந்து ராஜ்நாத்சிங் யோகா செய்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். அங்கு கடலில் நிறுத்தப்பட்டுள்ள முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தில் யோகா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தார். கடற்படை வீரர்கள், 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அக்னி வீரர்கள் ஆகியோர் கப்பலில் வரிசையாக […]

கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் கடற்படை வீரர்களுடன் சேர்ந்து ராஜ்நாத்சிங் யோகா செய்தார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். அங்கு கடலில் நிறுத்தப்பட்டுள்ள முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தில் யோகா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தார். கடற்படை வீரர்கள், 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அக்னி வீரர்கள் ஆகியோர் கப்பலில் வரிசையாக அமர்ந்து யோகா செய்தனர். கடற்படை தளபதி ஹரிகுமார், கடற்படை உயர் அதிகாரிகள், ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu