ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.
ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. தற்பொழுது, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். அதே சமயம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் பீதா மஸ்தான் ராவ் மற்றும் வெங்கடரமண ராவ் மோபிதேவி ஆகிய இருவர் ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்தது. ராஜினாமா செய்த இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளனர். மஸ்தான் ராவ் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.