பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முதல் முறையாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
சர்தார் ரமேஷ் சிங் ஆரோரா என்பவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள சிக்கிய சமூகத்தின் பிரதிநிதியாக அவர் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அவர், சீக்கியர்கள் மட்டுமன்றி, பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் போன்ற இதர சிறுபான்மையினருக்கும் சேர்த்து தான் பாதுகாப்பை மற்றும் சமூக நலனை உறுதி செய்ய உழைப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே, அவர் பாகிஸ்தானில் உள்ள ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மார்ச் 1 முதல், அடுத்த 3 ஆண்டுகளுக்கு, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா அமைப்புகளின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.