மீன் ஏற்றுமதி விலை குறைப்பு - ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

September 2, 2023

ராமேஸ்வரத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தராத காரணத்தினால் மீன் விலையை உயர்த்த கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் 800 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இங்கு கிடைக்கும் விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரகமீன்கள் டன் கணக்கில் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. […]

ராமேஸ்வரத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தராத காரணத்தினால் மீன் விலையை உயர்த்த கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் 800 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இங்கு கிடைக்கும் விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரகமீன்கள் டன் கணக்கில் மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன் ஏற்றுமதிக்கு தேவையான விலையை தராததால் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இவை கடலுக்கு சென்று வரும் செலவிற்கு கூட போதவில்லை எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர். இதனால் மீன் ஏற்றுமதி விலையை உயர்த்த கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்க மறுத்ததால் மீனவர்கள் இன்று காலை ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுட்டனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் இதனால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதில் மீனவர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu