ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தற்போது மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து உள்ளது. பெரும்பாலும் இவற்றில் நண்டு, இறால் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால், கனவாய் போன்றவற்றின் விலையை தற்போது மீன்பிடி தடைகாலத்திற்கு பின்பு 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வெகுவாக குறைத்துள்ளனர். இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொண்டு 50 சதவீதம் வரை விலை குறைப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.